தீபாவளி பண்டிகையையொட்டி டெல்லியில் ஏராளமானோர் ரயில்களில் பயணம் செய்த நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் டெல்லியில் பணியாற்றுபவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். மேலும், ரயிலில் ஏறி பயணிகளிடம் நிறை குறைகளையும் கேட்டறிந்தார்.