சென்னை தியாகராயர் நகரில் தீபாவளி விற்பனை களைகட்டியது.
தீபாவளியை ஒட்டி சென்னை தியாகராயர் நகரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்களை தடுக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆறு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஷாப்பிங் களைகட்டியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.