சென்னை புரசைவாக்கம் அடுத்த சூளைப் பகுதியில் உள்ள தெருக்களில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாகச் சென்னை புரசைவாக்கம் அடுத்த சூளை ரங்கையா தெரு, அஷ்டபூஜ்ஜியம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீர் தேங்கி காணப்படுகிறது.
இதனால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.