தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் இயக்கப்பட்ட அரசு பேருந்துகளில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 992 பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளதாகப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தீவாபளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்குக் கடந்த 16ம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி நேற்று மட்டும் 4 ஆயிரத்து 926 பேருந்துகள் இயக்கப்பட்டு, அதில் 2 லட்சத்து 56 ஆயிரம் பேர் பயணித்துள்ளதாகப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
அதேபோல் கடந்த 16 மற்றும் 17ம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் மூலம் 3 லட்சத்து 59 ஆயிரத்து 840 பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களில் சென்னையில் இருந்து அறிவிக்கப்பட்ட 4 ஆயிரத்து 860 சிறப்புப் பேருந்துகள் மட்டுமின்றி கூடுதலாக 710 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.