உத்தர பிரதேசத்தில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் அதில் இருந்த பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
டெல்லியிலிருந்து ஹாத்ராஸுக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷஹரின் குர்ஜா தேஹாக் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது.
நல்வாய்ப்பாகப் பேருந்தில் பயணித்த பயணிகள் துரிதமாக இறங்கியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்துத் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.