கோவை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் கெங்கம்பாளையம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைமட்ட பாலம் மூழ்கியது.
கோவையில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, ஆனைமலை, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாகக் கெங்கம்பாளையம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைமட்ட பாலம் மூழ்கியது.
கடும் வெள்ளப்பெருக்கால் கிராம மக்கள் சமத்தூர், பொள்ளாச்சி போன்ற பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.