கோவை மாவட்டம் ஆனைமலை அருகே பாலாற்றின் நடுவே சிக்கிய 2 பேரைத் தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறுக் கட்டி பத்திரமாக மீட்டனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.
இதனால் அங்கு உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு செல்கிறது. ஆற்றின் நடுவே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இரவுப் பணி காவலர்கள் இருவர் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், கயிறு மூலம் ஊழியர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டனர். இதேபோல் அப்பகுதியில் உள்ள பாலத்தையும் மூழ்கடித்து தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.