சீனாவில் நடுவானில் விமானத்தில் தீவிபத்து ஏற்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவின் செஜியாங் மாகாணம் காங்சூ நகரில் இருந்து தென்கொரியாவின் தலைநகர் சியோலுக்கு ஏர் சீனா விமானம் புறப்பட்டுச் சென்றது.
அந்த விமானத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பயணித்தனர். இந்நிலையில் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது பயணிகள் இருக்கைக்கு மேல் இருந்த உடைமைகளை வைக்கும் பகுதி தீடிரெனத் தீப்பிடித்தது.
இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், உடனடியாக விமான பணியாளர்கள்பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இதையடுத்து விமானம் அவசர அவசரமாக ஷாங்காய் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் பயணி தனது பையில் வைத்திருந்த லித்தியம் பேட்டரி சூடாகி தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.