தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்பட்ட அரசு குளிர்சாதன பேருந்தில் பழுது ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தேனிக்கு முன்பதிவு செய்யப்பட்ட அரசு குளிர்சாதன பேருந்து இயக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடிக்கு வந்தபோது பேருந்தின் இன்ஜினில் திடீரெனக் கோளாறு ஏற்பட்டு பழுதாகி நின்றது.
இதனையடுத்து பயணிகள், சுங்கச்சாவடி ஊழியர்கள் பேருந்தை தள்ளிச் சாலையோரத்தில் நிறுத்தினர். இதனையடுத்து மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.