செங்கடலில் பயணித்த சரக்குக் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இஸ்ரேல் , ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாகப் போர் நடைபெற்றது. இந்தப் போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்தனர்.
அந்தவகையில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல் மற்றும் செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கினர்.
தற்போது இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட போதிலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து கப்பல்களைத் தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஓமனில் இருந்து செங்கடல் வழியாகக் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜிபூட்டி நாட்டிற்கு சென்றுகொண்டிருந்த சரக்குக் கப்பல் மீது ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















