பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசின் இளைய சகோதரரான இளவரசர் ஆண்ட்ரூ, அரச பட்டங்களைத் துறப்பதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த வர்ஜீனியா கியூப்ரே என்ற பெண், பிரபல தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறியிருந்தார்.
இதனிடையே பாலியல் புகார் அளித்த வர்ஜீனியா கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இளவரசர் ஆண்ட்ரூ, தற்போது அரச பட்டங்களைத் துறப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், தன் மீதான குற்றச்சாட்டுக்கள் மன்னர் மற்றும் அரச குடும்பத்தின் பணிகளுக்கு இடையூறாக உள்ளதால் பொது வாழ்க்கையில் இருந்து விலக முடிவு செய்து உள்ளேன் எனக் கூறியுள்ளார்.
தன் பட்டத்தையோ அல்லது தனக்கு வழங்கப்பட்ட கவுரவங்களையோ இனி பயன்படுத்தமாட்டேன் எனவும் ஆண்ட்ரூ கூறியுள்ளார்.