உத்தரபிரதேசத்தின் ஃப்ரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது.
ஃப்ரூக்காபாத் மாவட்டம் சுக்ருல்லாபூர் அருகே உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் திடீரெனத் தீவிபத்து ஏற்பட்டது.
வானளவிற்கு தீப்பிழப்புகள் எழுந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் சூழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நல்வாய்ப்பாக இந்தத் தீவிபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.