ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியுடன் வழக்கறிஞர் ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஜார்கண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் குமார் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மகேஷ் திவாரி ஆஜரானார்.
அப்போது, நீதிபதிக்கும், வழக்கறிஞர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வழக்கறிஞரைக் கண்டித்த நீதிபதி, அவர் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.
இவையனைத்தும் நீதிமன்றத்தின் நேரடி ஒளிபரப்பில் பதிவானது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே வழக்கறிஞர்மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த மாதம் 11-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.