தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் திருவாசகம் பதிகம் பாட தடை விதிக்கப்பட்டதற்கு இந்து முன்னணி அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில் தரினத்திற்கு வரும் பக்தர்கள் சிலர், மாணிக்கவாசகரின் திருவாசக பதிகத்தை பாடி வருகின்றனர்.
இந்தநிலையில் கோவில் நிர்வாக அதிகாரி பொன்னி, கோயிலில் திருவாசகத்தை பாடக் கூடாதென உத்தரவிட்டதாகவும், பதிகத்தை பாடும் பக்தர்களை வெளியேற்றுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்குக் கடும் கண்டம் தெரிவித்துள்ள இந்து முன்னணியினர், இது தொடர்பான உத்தரவைத் திரும்பப்பெறாவிட்டால் இந்துக்கள், சிவனடியார்களை திரட்டி விரைவில் போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளனர்.