அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலாவியா எரிமலை வெடித்து 1,500 அடி உயரத்திற்கு தீக்குழம்புகள் வெளியேறி வருகின்றன.
அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. அமெரிக்க நிலப்பரப்பில் இருந்து தென்மேற்கே 2,000 மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ள இந்தத் தீவு, எரிமலைகளுக்குப் புகழ் பெற்றது. இங்குள்ள 5 பெரிய எரிமலைகளில் கிலாவியா எனும் எரிமலையும் ஒன்றாகும்.
இங்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் ஆண்டு முழுவதும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் கிலாவியா எரிமலை 1,500 அடி உயரத்திற்கு கடும் சீற்றத்துடன் எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருகிறது.
இதன் காரணமாகச் சுற்றுலாப் பயணிகளை அங்கிருந்து வெளியேற்றும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்புகுறித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கிலாவியா எரிமலை 30-வது முறையாக வெடித்துள்ளது. இந்த எரிமலை எப்போது வேண்டுமானாலும் முழுவதுமாக வெடிக்கும் அபாயம் நிலவுகிறது என ஹவாய் எரிமலை ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.