தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளை வாங்க திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாளைத் தீபாவளி கொண்டாடப்பட உள்ளதால் புத்தாடைகள், பட்டாசுகளை வாங்குவதற்காகப் பாடியநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் செங்குன்றம் கடைவீதிகளில் குவிந்தனர்.
அப்போது அங்கு ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வந்ததால் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் பாடியநல்லூர் முதல் புழல் கேம்ப் வரை, வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனையடுத்து போக்குவரத்து காவலர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.