ஹமாஸ் அமைப்பு ஆயுதமற்றதாக மாற்றப்படும் வரை காசாவில் போர் முடிவடையாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன் மொழிந்த அமைதி திட்டத்தின் படி தற்போது அங்கு போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இருப்பினும், ஹமாஸ் மற்றும் அவர்களை எதிர்க்கும் சில குழுக்கள் இடையே மோதல் எழுந்து வருகிறது.
காசா மக்களை கொல்வதை நிறுத்த வேண்டும், இல்லாவிட்டால் உள்ளே சென்று ஹமாஸ் அமைப்பினரை கொல்வதை தவிர வேறு வழி இல்லை என்று டிரம்பும் அண்மையில் கடுமையான எச்சரிக்கையை விடுத்து இருந்தார்.
இதனிடையே பாலஸ்தீன மக்களை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பு ஆயுதமற்றதாக மாற்றப்படும் வரை காசாவில் போர் முடிவடையாது எனவும், ஹமாஸ் அமைப்பிடம் இருந்து ஆயுதங்களை பறிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இது வெற்றிகரமாக முடிந்ததும் போர் முடிவுக்கு வரும் எனவும் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.