தீபாவளி கொண்டாட்டத்தின்போது மடிக்கணினியில் வேலை பார்த்தப்படியே நடனமாடிய ஊழியரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகெங்கும் வரும் திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள், பணியாற்றும் அலுவலகங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் அலுவலகம் ஒன்றில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. அப்பது ஊழியர் ஒருவர், மடிக்கணினியை கையில் பிடித்தபடி நடனமாடினார்.பணியில் கவனமும், கொண்டாட்டத்திற்கான உற்சாகமும் ஒன்றாகக் கலந்த இந்தக் காட்சி வைரலாகி வருகிறது.