தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில்,எத்திக்கும் இருள் அகன்று, ஒளி பெருகித் தித்திக்கும் தீபாவளி திருநாளில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகி நிறைந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
அனைவரும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்! என தெரிவித்துள்ளார்.