கோவா கடற்கரையிலும் நிறுத்தப்பட்டுள்ள உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் உள்ள கடற்படை வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார்.
பிரதமர் உரைய அவர்,”எனது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடுவது வழக்கமாகி விட்டதாக தெரிவித்தார்.
அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் நான் எனது குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாட வருகிறேன்” என்று அவர் கூறினார்.
இந்திய வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவது ஆனந்தம் அளிப்பதாகவும் தான் ஒர “அதிர்ஷ்டசாலி” என்று பிரதமர் மோடி கூறினார்.
“இன்று, ஒரு பக்கம், எனக்கு எல்லையற்ற எல்லைகள், எல்லையற்ற வானம், மறுபுறம், எல்லையற்ற சக்திகளை உள்ளடக்கிய இந்த மாபெரும் ஐஎன்எஸ் விக்ராந்த் நம்மிடம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.பிரதமர் தனது அனுபவத்தை வீரர்களுடன் பகிர்ந்து கொண்டார்,
“ஐஎன்எஸ் விக்ராந்தில் நேற்று கழித்த இரவை வார்த்தைகளில் விவரிக்க கடினமாக உள்ளது என்றும்,. நீங்கள் அனைவரும் நிறைந்திருந்த மகத்தான ஆற்றலையும் உற்சாகத்தையும் தான் கண்டதாகவும் குறிப்பிட்டார்.
நேற்று நீங்கள் தேசபக்தி பாடல்களைப் பாடுவதையும், உங்கள் பாடல்களில் ஆபரேஷன் சிந்தூரை விவரித்த விதத்தையும் நான் பார்த்தபோது, ஒரு ஜவான் போர்க்களத்தில் நிற்கும்போது உணரும் அனுபவத்தை எந்த வார்த்தைகளாலும் முழுமையாக வெளிப்படுத்த முடியாது,” என்று அவர் கூறினார்.
ஐஎன்எஸ் விக்ராந்த் பற்றி பிரதமர் மோடி மேலும் பேசினார், அதன் பெயர் நாட்டின் எதிரிகளுக்கு “தூக்கமில்லாத இரவுகளை” எவ்வாறு அளிக்கும் என்பதை வலியுறுத்தினார்.
” இன்று, ஐஎன்எஸ் விக்ராந்த் #ஆத்மநிர்பர்பாரத்தின் சக்திவாய்ந்த அடையாளமாகவும், இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற உணர்வாகவும் நிற்கிறது.
சுதேசி ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியாவின் வலிமையின் சின்னமாகும். சில மாதங்களுக்கு முன்பு, விக்ராந்த் தனது பெயரால் மட்டுமே பாகிஸ்தானுக்கு தூக்கமில்லாத இரவுகளைக் கொடுத்ததைக் கண்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் போர் கப்பல்களை நகரவிடாமல் இந்திய கடற்படையினர் முடக்கினர் என்றும்,ஐஎன்எஸ் விக்ராந்த் பாகிஸ்தானை மண்டியிட வைத்ததாகவும் மோடி குறிப்பிட்டார்.