நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது,
தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகள் தான். கடந்த ஆண்டு 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனை நடைபெற்றது.
இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு டெல்லியில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கூடுதலாக சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை பட்டாசு விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த ஆண்டு சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் வரை பட்டாசு விற்பனை நடைபெற்றிருப்பதாக பட்டாசு வணிகர் கூட்டமைப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.