நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் தீபாவளி வாழ்த்துகள் என கூறியிருப்பது ஹிந்துக்களை அவமதிக்கும் செயல் என துணை முதல்வர் உதயநிதிக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்ததுள்ளது.
“ஆன்மிக பூமியான தமிழகத்தில் ஹிந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத அரசு அதிகாரத்தில் உள்ளதாகவும், ஹிந்து மதத்துக்கு எதிராக செயல்படுபவர்களை, ஹிந்துக்கள் அடையாளம் காண வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“திமுக ஆட்சிக்கு வந்த பின், கோயில் நிதி, தங்கம் மற்றும் இடங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன என்றும், பண்டிகைகளின் மகத்துவத்தையும், அது எப்படி உருவானது என்பதையும் வளரும் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும் என்றும் இந்து முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.