திற்பரப்பு அருவியில் இரண்டு நாட்களுக்கு பிறகு கட்டுப்பாடு இன்றி சுற்றுலா பயணிகள் .குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது .இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து திற்ப்பரப்பு அருவியில் கடந்த இரண்டு தினங்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க ஒரு பகுதியில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று அருவியில் சுற்றுலாப் பள்ளிகள் குளிக்க முழுவதும் அனுமதி வழங்கப்பட்டது..
இதை ஒட்டி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குளித்து மகிழ்ந்தனர்.