இஸ்ரேல் காசா போர் நிறுத்தத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மஞ்சள் நிற எல்லை கோடு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காசா பகுதியில் தற்போதைய போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் இஸ்ரேல் இராணுவம் பின்வாங்கிய பின்னர் எல்லைகளை நிர்ணயிக்கும் மஞ்சள் கோட்டை இஸ்ரேல் இராணுவம் அமைத்து வருகிறது.
மஞ்சள் வண்ணம் பூசப்பட்ட கான்கிரீட் கட்டைகள் கனரக இயந்திரங்கள் மூலம் நகர்த்தி இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைகள் நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த இருதினங்களுக்கு முன்பு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இராணுவக் கட்டுப்பாட்டின் எல்லைகளை நிர்ணயித்து அவை தெளிவாக தெரியும் வகையில் அடையாளங்களை அமைக்க உத்தரவிட்டார்.
மேலும், “ஹமாஸ் பயங்கரவாதிகள் மற்றும் காசா குடியிருப்பாளர்கள் விதியை மீறி எல்லையைக் கடக்க முயற்சி செய்தால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்” என்று கூறியிருந்தார்.
இருநாடுகளுக்குமான மத்தியஸ்தர்கள் முன்னிலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த எல்லைக் கோடுகள் காசா பகுதியில் 53% -க்கும் மேல் அமைக்கப்பட்டுள்ளது.