தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்ததை குறிக்கும் வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று தமிழகம் முழுவதும் மக்கள் புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழந்தனர்.
மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து ஆனந்தம் அடைந்தனர்.