ஒசூர் அருகே சாலையோரம் இருந்த மின்கம்பம் திடீரெனச் சாய்ந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
மின்சார கம்பிகள் சாலையின் குறுக்கே விழுந்த நிலையில் உடனடியாக அப்பகுதி மக்கள் கற்களால் தடுப்பு அமைத்து வாகன ஓட்டிகளை பாதுகாப்பாகச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
தகவலறிந்து சென்ற மின்வாரி ஊழியர்கள், சாய்ந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை நிறுவி உடனடியாக மின்சாரத்தை வழங்கினர்.