சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தீபாவளி பண்டிகையை மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர். அதேபோல் புதிதாக வெளியான திரைப்படத்தைப் பார்ப்பதற்கும் திரையரங்குகளை நோக்கி மக்கள் படையெடுத்தனர்.
அந்த வகையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள திரையரங்கில் படம் பார்க்க வந்த மக்களால் கூட்டம் அலை மோதியது. ஒரே நேரத்தில் அதிக அளவில் படம் பார்க்க மக்கள் வந்ததால் திரையரங்க வாயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.