சென்னையில் தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கையசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
தீபாவளியை ஒட்டி நடிகர் ரஜினிகாந்த்திடம் வாழ்த்து பெறுவதற்காகச் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பு காலை 6 மணி முதலேயே 100-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.
காலை 9 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்களை பார்த்துக் கையசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அப்போது ரசிகர்களும்ரஜினிகாந்த்துக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்து கொள்வதாகவும் ரசிகர்கள் உட்பட அனைவரும் நன்றாக இருக்க இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் கூறினார்.