அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் உள்ள சுவாமி நாராயணன் அக்ஷர்தம் கோயிலில் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டியது.
இந்தியாவின் டெல்லி மற்றும் குஜராத்தில் மட்டுமே அக்ஷர்தம் கோயில் அமைக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்தியாவை தாண்டி அமெரிக்காவின் நியூஜெர்சியிலும் அக்ஷர்தம் கோயில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது மிகப் பெரிய இந்துக் கோயில் என்ற பெருமையையும் அமெரிக்காவின் மிகப் பெரிய இந்துக் கோயில் என்ற பெருமையையும் சுவாமி நாராயணன் அக்ஷர்தம் கோயில் பெற்றுள்ளது.
இந்நிலையில் கோயிலில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. வாண வேடிக்கைகளின் ஒளியில் கோயில் ஜொலித்த காட்சிகள; இணையத்தில் வைரலாகி வருகின்றன.