ஆழ்கடலில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மீனவர்களுக்குச் செயற்கைக்கோள் தொலைபேசி சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், வல்லவிளையை சேர்ந்த 30 மீனவர்கள், ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். தொடர்ந்து கனமழை எச்சரிக்கை காரணமாக அவர்கள் கரை திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பாக கரைக்கு திரும்ப, வழிகாட்டும் வகையில், செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்பை, மீண்டும் செயல்படுத்தி தர கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் அவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் மீனவர்கள் பத்திரமாக கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.