அமெரிக்காவின் ஓரேகான் நகரில் நடைபெற்ற விநோத போட்டியை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.
அமெரிக்காவின் ஓரேகான் நகரில் ஆண்டுதோறும் பிரம்மாண்ட பூசணிக்காயில் மிதக்கும் படகுப் பந்தயம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
முன்னதாகப் பிரத்யேகமாக வளர்க்கப்பட்ட ராட்சத பூசணிக்காய் கொண்டுவரப்பட்டன. தொடர்ந்து அவை படகுபோல் வடிவமைக்கப்பட்டு தண்ணீரில் இறக்கப்பட்டன.
இதையடுத்து வீரர்கள் நகைச்சுவை கதாபாத்திரத்தின் வேடமிட்டு பூசணிக்காயில் அமர்ந்து தண்ணீரில் துடுப்பு போட்டு இலக்கை நோக்கிப் பயணித்தனர்.
தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் கடந்து வெற்றி பெற்ற வீரருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.