மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் உள்ள ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார்.
தீபாவளி பண்டிகைக்காக மக்கள் சொந்த ஊர் திரும்ப நாடு முழுவதும், வழக்கமான ரயில்கள் மட்டுமல்லாமல், ஏராளமான சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் மூலம் ஏராளமானோர் சொந்த ஊருக்குப் பயணித்தனர்.
இந்நிலையில் மக்களின் வசதிக்காக ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்குப் பணியாற்றும் ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கிய அவர், தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.