ஹாங்காங்கில் ரன்வேயில் தரையிறங்கியபோது சரக்கு விமானம் கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
துபாயில் இருந்து கிளம்பிய போயிங் 747 சரக்கு விமானம் ஹாங்காங் விமான நிலையத்தின் ரன்வேயில் தரையிறங்கியது. அப்போது எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு விமானம், திடீரென ரன்வேயில் இருந்து விலகி அருகில் உள்ள கடலுக்குள் பாய்ந்தது.
இதில் விமானத்தின் பாதி பகுதி கடலில் மூழ்கிய நிலையில், விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
இருப்பினும் ரன்வே அருகே பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் இருவர் விமானத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.