ராணிப்பேட்டையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாகக் கல்குவாரிகள், குட்டை மற்றும் ஆறுகளில் பொதுமக்கள் குளிப்பதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.
ராணிப்பேட்டையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகிறது.
குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 40 இடங்கள் கண்டறியப்பட்டு தற்காலிகமாக முகாம்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும் நீர்நிலைகளில் குளிப்பதையும், இடி மின்னலின்போது வெளியில் வருவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.