ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் விக்கிபீடியாவின் தேடுதல் 8 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இதுகுறித்து விக்கிபீடியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது பக்கங்களைப் பார்வையிடுவோரின் எண்ணிக்கை, இந்த ஆண்டில் இதுவரை 8 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஏ.ஐ., தேடுதல் கருவிகள் அதிகரித்திருப்பதும், பயனாளர்களின் வழக்கம் மாறியிருப்பதும் இதற்குக் காரணமென்றும் கூறப்பட்டுள்ளது. ஏ.ஐ., தளங்கள் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் சந்தேகங்களுக்கு அதிகளவில் பதில் அளிக்கப்படுவதால், பயனாளர்கள் விக்கிபீடியோவை நாடுவதை குறைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இளைய தலைமுறையினர் நேரடியாகச் சமூக வலைதள வீடியோ பக்கங்களை அதிகம் நாடுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.ஐ., தளங்களில் விளக்கம் கேட்பவர்களுக்கான பதிலை விக்கிபீடியாவின் ஆதாரங்களை எடுத்து ஏஐ சாட்பாட்கள் பதிலளிப்பதாகவும், அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், கூடுதல் தகவல்களுக்கு விக்கிபீடியா தொடர்ந்து முக்கிய ஆதாரமாக விளங்குவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.