சீனாவில் 13 ஆவது நாட்டுப்புறக் கலை விழா கோலாகலமாக நடைபெற்றது.
குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஃபோஷான் நகரில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டுப்புற கலை விழா நடத்தப்படுகிறது.
அந்த வகையில் 13 ஆவது நாட்டுப்புற கலைவிழா கடந்த 17 ஆம் தேதி அணிவகுப்புடன் தொடங்கியது.
இதில் 5 கண்டங்களில் உள்ள 13 நாடுகளை சேர்ந்த கலைக்குழுக்கள் பங்கேற்றனர். முன்னதாகத் தொடக்க விழாவில் வீதிகளில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை அவர்கள் கவர்ந்தனர்.
தொடர்ந்து 4 நாட்கள் ஃபோஷான் நகரில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் கலைஞர்கள் தங்களின் தனித்திறனை வெளிப்படுத்திப் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.