பிலிப்பைன்ஸில் பெய்த கனமழை மற்றும் வெள்ளபெருக்கில் சிக்கி இதுவரை 11 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்குள்ள ரோக்சாஸ் சிட்டி பகுதியில் ரமில் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பல பகுதிகள் முழுமையாகத் தண்ணீரில் மூழ்கிய நிலையில், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.