பெங்களூருவில் தீபாவளியன்று வான் பரப்பை அலங்கரித்த வாண வேடிக்கைகளின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
தீபாவளி அன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை வெடிக்கப்பட்ட வாண வேடிக்கைகள், நகரின் வான் பகுதியை அலங்கரித்தன. இதனை ஸ்ரீஹரி கரந்த் என்ற இளைஞர் வீடியோவாகப் பதிவு செய்தார்.
தொடர்ந்து ஒரு மணி நேர வீடியோவை, ஒரு நிமிட டைம்லாப்ஸ் வீடியோவாக உருவாக்கிச் சமூக வலை தளத்தில் பதிவிட்டார்.
இந்த வீடியோ பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்தக் கண்கவர் வீடியோவைக் கண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அதற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது ஒரு அருமையான முயற்சி என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோவை இணைய வாசிகள் பலரும் பாராட்டிக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.