ஆஸ்திரேலிய தூதரைப் பார்த்து உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்காவுக்கான ஆஸ்திரேலிய தூதராகக் கெவின் ரூட் என்பவர் செயல்பட்டு வருகிறார்.
இவர் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தல் கலவரத்துக்காக, வரலாற்றில் மிகவும் அழிவுகரமான அதிபர் டிரம்ப் எனச் சமூக வலைதளத்தில் விமர்சித்திருந்தார்.
பின்னர் மீண்டும் டிரம்ப் ஆட்சியமைத்ததும் தனது பதிவுகளை நீக்கிவிட்டார். இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்த நிகழ்வில், ஆஸ்திரேலிய தூதர் கெவின் ரூட்டும் பங்கேற்றிருந்தார்.
நிகழ்வில் நிருபர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், எனக்கும் ஆஸ்திரேலிய தூதர் கெவின் ரூட்டை பிடிக்கவில்லை என சிரித்துக் கொண்டே கூறினார்.