இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான TCS, ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடால் இதுவரை இல்லாத வகையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
2025 செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில், TCS நிறுவனம் 19 ஆயிரத்து 755 பணியாளர்களை இழந்தது. இதில் தானாக விலகியவர்களும், நிறுவனம் நீக்கியவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இதனால் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையும் 6 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது. வேலை நீக்க நடவடிக்கைகளுக்காக மட்டும் TCS ஆயிரத்து 135 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அமெரிக்காவின் ஹெச் 1 பி விசா கட்டுப்பாடும் இந்திய ஐடி நிறுவனங்களுக்குச் சவாலாக அமைந்துள்ளது.
இதனைப் போக்கும் விதமாக TCS அமெரிக்காவில் உள்ளூர் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இருப்பினும் வரும் காலத்தில் முக்கிய திறன்களை கொண்ட நபர்களைத் தொடர்ந்து பணி அமர்த்துவோம் என்றும் டிசிஎஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.