வங்கக்கடலில் புயல் உருவாகுமா என்பது நாளை தெரிய வரும் என வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகச் சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
கடலூர், நாகை, தஞ்சை, உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்றும் கடந்த 24 மணிநேரத்தில் 4 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது என்று அமுதா கூறினார்.
“தமிழகத்தில் 59% அளவுக்கு வடகிழக்கு பருவமழையின் பொழிவு அதிகரித்துள்ளது என்றும் அக்.23-ல் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பொழியும் என்றும் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார். “சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வங்கக்கடலில் புயல் உருவாகுமா என்பது நாளை தெரிய வரும் என்று அவர் கூறினார்.