கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து 96 வழித்தட எண் கொண்ட அரசு சொகுசு பேருந்து வாளையார் நோக்கிப் புறப்பட்டது.
அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்கு நின்றிருந்த மினி பேருந்து உட்பட நான்கு பேருந்துகள் மற்றும் பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள்மீது மோதியது.
இந்த விபத்தில், கடலூரைச் சேர்ந்த ஹரிணி என்ற 19 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த 3 பேரை அங்கிருந்த பயணிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அரசுப் பேருந்து ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.