வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகளை விரைவுபடுத்த, 12 மாவட்டங்களுக்குக் கண்காணிப்பு அதிகாரிகளை, தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவப்மழை தீவிரமடைந்து வரும் நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்குக் கண்காணிப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திருவள்ளூர் மாவட்டத்திற்கு எல்காட் மேலாண் இயக்குநர் கார்த்திகேயனும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தாட்கோ மேலாண் இயக்குநர் கந்தசாமியும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மேலாண் இயக்குநர் கிரந்திகுமார் பாடியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே போன்று, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.