தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் 789 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 170 கோடியே 64 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்தில் 158 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 157 கோடியே 31 லட்சம் ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையானதாகக் கூறப்பட்டுள்ளது.
சேலம் மண்டலத்தில் 153 கோடியே 34 லட்சம் ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 170 கோடியே 64 லட்சம் ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கோவை மண்டலத்தில் 150 கோடியே 31 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.