இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானின் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் மீண்டும் காபூலில் இந்திய தூதரகம் திறக்கப்பட்டுள்ளது.
அண்மையில் டெல்லி வந்திருந்த ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமிர்கான் முத்தாகியும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம் திறக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்திருந்தார்.
அதன்படி தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய பிரதிநிதிகள் அலுவலகம் மீண்டும் தூதரகமாக மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான் அமைப்பு கைப்பற்றிய பிறகு மீண்டும் காபூலில் தூதரகம் திறக்கப்பட்டுள்ளது.