விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வெள்ளப்பெருக்கு காரணமாகத் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் ராஜபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.
இதனால் வாகைக்குளம் கண்மாயிலிருந்து கீழராஜகுலராமன் கண்மாய்க்கு செல்லும் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆப்பனூர் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கிப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் கிராம மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.