வர்த்தக பிரச்னைகள்குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகயைில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு குத்து விளக்குகளை ஏற்றிவைத்தார். இந்த நிகழ்வில் FBI தலைவர் காஷ் படேல், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா மற்றும் இந்திய, அமெரிக்கவைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்திய மக்களுக்கு மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
பிரதமர் மோடியுடன் சிறந்த உரையாடலை நடத்தியதாகவும், பிரதமர் மோடி சிறந்த மனிதர் எனவும் வர்ணித்தார்.
ரஷ்யாவுடன் அதிக எண்ணெய் வாங்கப்போவதில்லையெனப் பிரதமர் மோடி தெரிவித்தாகவும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர மோடி விரும்புவதாகவும் கூறினார்.
மேலும், நவம்பர் 1ஆம் தேதி முதல் சீனா மீது 155 சதவீதம் வரி விதிக்கப்படும் எனவும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.