கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவக்குமாரை, தொழிலதிபர் கிரண் மஜும்தார் ஷா சந்தித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு நகரின் மோசமான சாலைகள் குறித்து, பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா எக்ஸ் தளத்தில் விமர்சித்திருந்தது தேசிய அளவில் எதிரொலித்தது.
இதுகுறித்து ஆளும் காங்கிரசார் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா, கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவக்குமாரை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
திருமண அழைப்பிதழை வழங்குவதற்காக இந்தச் சந்திப்பு நடந்திருந்தாலும், பெங்களூருவில் சாலைகளின் நிலை மற்றும் பெருகிவரும் குப்பைகள்குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.