இந்தியாவில் மின்சார வாகனங்கள், பேட்டரிகளுக்கு வழங்கப்படும் மானியங்களால், தங்கள் நாட்டின் பொருளாதார நலன் பாதிப்பதாக, உலக வர்த்தக அமைப்பில், சீனா புகார் அளித்துள்ளது.
பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைக்க மின்சார வாகனங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகளுக்கு அதிக அளவில் மானியங்கள் வழங்கி வருகின்றன.
இது இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகன நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக அமைகிறது. மேலும் இது நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாகவும், மின்சார வாகன விற்பனையை அதிகரிக்கும் வகையிலும் விளங்குகிறது.
இந்நிலையில் இந்தியாவில் வழங்கப்படும் மானியங்களால், தங்கள் நாட்டின் பொருளாதார நலன் பாதிப்பதாக, உலக வர்த்தக அமைப்பில், சீனா புகார் அளித்துள்ளது.
இறக்குமதிக்கு மாற்றாக உள்ள இவை, உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறுவதாக உள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது. இதனை இந்தியா சரி செய்ய வேண்டும் என்றும் சீனா கோரியுள்ளது.