50 ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த கபாலா என்ற தொழிலாளர் நடைமுறையைச் சவுதி அரேபியா முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
வளைகுடா நாடுகளுக்கு உடல் உழைப்பை முன் வைத்துப் பல நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.
பெரும் எண்ணிக்கையில் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எனக் கபாலா என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இந்த நடைமுறைமூலம் முதலாளிகள் தங்களின் தொழிலாளர்கள்மீது முழு ஆதிக்கம் செலுத்தலாம்.
அவர்களின் விசா, பயணம், தங்கும் இடம், உணவுச் செலவுகள் உள்ளிட்டவற்றை ஸ்பான்சர் செய்பவர் ஏற்றுக் கொள்வார்.
தொழிலாளர்கள் தமது விருப்பப்படி சொந்த நாடு அல்லது ஊருக்குத் திரும்பவோ அல்லது பணியை மாற்றவோ முடியாது.
இந்நிலையிலேயே தற்போது இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதாகச் சவுதி அரேபியா அறிவித்துள்ளது.